புதுச்சேரி மாநில அந்தஸ்து திர்மானத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் - கவர்னர் மாளிகை தகவல்


புதுச்சேரி மாநில அந்தஸ்து திர்மானத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் - கவர்னர் மாளிகை தகவல்
x

மாநில அந்தஸ்து தீர்மான கோப்புக்கு 23-ந்தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் திர்மானத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22-ந்தேதி அனுப்பப்பட்ட மாநில அந்தஸ்து தீர்மான கோப்புக்கு 23-ந்தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.


Next Story