மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது


மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

பாகூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பாகூர்

பாகூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

பாகூர் அருகே உள்ள முள்ளோடை-பரிக்கல்பட்டு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரித்ததில் அவர் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 23) என்பதும், சென்னையில் இருந்து கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேசை கைது செய்த போலீசார் 1½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இவர் மீது கடலூர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story