விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

புதுவை வில்லியனூர் அருகே மனைவியுடன் நடந்த தகராறு காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தீவிர விசாரணை.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 25). ஏரிக்கரை ஓரம் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெங்கடேஷ் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சமீப காலமாக அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ், வீட்டில் பறவைகளுக்கு வைக்கும் விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்ததும் பதறிப்போன உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.


Next Story