போக்குவரத்து விதிகளை மீறிய 26 ஆயிரம் பேருக்கு குறுஞ்செய்தி


போக்குவரத்து விதிகளை மீறிய 26 ஆயிரம் பேருக்கு குறுஞ்செய்தி
x

புதுவையில் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விளக்கம் அளிக்க 26 ஆயிரம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விளக்கம் அளிக்க 26 ஆயிரம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது அந்தந்த மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுவையில் மத்திய சாலை பாதுகாப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது விபத்தில் உயிரிழப்பை தடுப்பது, சாலை மேம்படுத்துதல், சிகனல்களை சீரமைத்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை புதுவை அதிகாரிகளுக்கு வழங்கியது.

இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திர குமார் யாதவ் நடவடிக்கை எடுத்து புதுவையில் ஹெல்மெட் அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறினார். இதனால் புதுவையில் உள்ள வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

குறுஞ்செய்தி

இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்சென்ற உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு தற்போது உங்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல் துறையால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

இதில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அடுத்த 5 நாட்களில் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story