பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய தலைமை நீதிபதி


பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய தலைமை நீதிபதி
x

புதுவையில் கோர்ட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்கைள தலைமை நீதிபதி வழங்கினார்.

புதுச்சேரி

புதுவையில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில் பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணிவதில்லை.

இந்தநிலையில் சட்டசபைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே புதுவை கோர்ட்டு வளாகத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் கோர்ட்டுக்கு முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு தலைமை நீதிபதி செல்வநாதன் முகக்கவசம் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேலு மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.


Next Story