போலீசார் விரட்டி பிடித்த போது ரவுடிக்கு கை முறிவு

புதுவையில் தப்பியோடிய ரவுடியை போலீசார் விரட்டி பிடித்த போது தடுமாறி விழுந்ததால் ரவுடிக்கு கை முறிந்தது.
புதுச்சேரி
புதுச்சேரி சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி அந்தோணிதாஸ் (வயது 36), இவர் மீது 2 கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகளும், தமிழக பகுதிகளில் 4 கொலை வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் முத்தியால்பேட்டை போலீசார் சோலைநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அந்தோணிதாஸ் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
அந்தோணி தாசை போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பி ஓடியபோது கால் தடுக்கி விழுந்ததில் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதன்பின் அந்தோணிதாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story