ஏரி மீன்கள் விற்பனை அமோகம்


ஏரி மீன்கள் விற்பனை அமோகம்
x

புதுவையில் மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக ஏரி மீன்களின் விற்பனை அமோகமாக இருந்தது.

புதுச்சேரி

மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக ஏரி மீன்களின் விற்பனை அமோகமாக இருந்தது.

ஏரி மீன்கள்

கடலில் மீன்வளத்தை பெருக்க வங்கக்கடலில் கடந்த 15-ந்தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சிறிய படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் புதுவை மக்களுக்கு தேவையான மீன்கள் கிடைப்பதில்லை. எனவே அவர்களின் மீன் உணவு தேவையை ஈடுசெய்யும் விதமாக ஏரி மீன்கள் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.

புதுவை மற்றும் அருகிலுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூர் பகுதிகளில் ஏரியில் பிடிக்கப்படும் மீன்கள் உயிருடன் கொண்டு வந்து புதுவையில் விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் ஆர்வம்

மரப்பாலம், நெல்லித்தோப்பு, வழுதாவூர் ரோடு, செஞ்சி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த மீன்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கட்லா, இரால், ஜிலேபி மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

கிலோ ரூ.200 முதல் ரூ.500 வரை இந்த வகையான மீன்கள் விற்பனையானது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கடல்மீன் வரத்து குறைந்துள்ள நிலையில் பொதுமக்களின் பார்வை கோழி, ஆட்டு இறைச்சி, ஏரி மீன்கள் பக்கம் திரும்பியுள்ளது.


Next Story