தந்தை முகத்தில் எச்சில் துப்பிய மகன்


தந்தை முகத்தில் எச்சில் துப்பிய மகன்
x

புதுவை முருங்கப்பாக்கம்-வில்லியனூர் ரோட்டை சேர்ந்த தந்தை முகத்தில் எச்சில் துப்பிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவை முருங்கப்பாக்கம்-வில்லியனூர் ரோட்டை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 76). இவரது மகன் கணேசன். காத்தவராயன் ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்தார்.வீட்டின் தரைதளத்தில் கணேசன் அவரது மனைவி ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். அவர்கள் 'லவ்பேட்ஸ்' மற்றும் புறாக்கள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்கள்.

பறவைகள் எச்சங்கள் காரணமாக, தனக்கு தொற்று ஏற்படுவதாக காத்தவராயன் தனது மகன் கணேசனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசனும், அவரது மனைவியும் அவரை தரக்குறைவாக திட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் கணேசன் தனது தந்தையின் முகத்தில் எச்சில் துப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் கணேசன் மற்றும் ஜெயந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story