ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் கவலைக்கிடம்


ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் கவலைக்கிடம்
x

புதுவையில் ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் கவலைக்கிடமான நிலையில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று இரவு 7.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் புதுவை-கடலூர் சாலை ஏ.எப்.டி. மில் அருகே வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்றவர் மீது மோதி சென்றது. இதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ரெயில்வே போலீசார், உள்ளூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ரெயில் மோதி படுகாயமடைந்தவருக்கு சுமார் 35 வயது எனவும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே ரெயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதில் உருளையன்பேட்டை மற்றும் முதலியார்பேட்டை போலீஸ் நிலையங்களுக்கு இடையே இழுபறி நீடித்தது.


Next Story