உப்பனாறு பாலத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும்

காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் உப்பனாறு பாலத்தின் உறுதி தன்மையை சீர்குலைக்கும் வகையில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநள்ளாறு
காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் உப்பனாறு பாலத்தின் உறுதி தன்மையை சீர்குலைக்கும் வகையில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பனாறு பாலம்
காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் நூற்றாண்டுகள் பழமையான உப்பனாறு பாலம் உள்ளது. இந்த பாலம் காரைக்கால்-திருநள்ளாறு இடையேயான முக்கிய பாலமாகும். இந்த பாலம் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பாலத்தின் உறுதி தன்மையை சீர்குலைக்கும் வகையில், பாலத்தின் இருபுறமும், அரசு, ஆல மரங்கள் வளர்ந்து வருகின்றன. மேலும் செடி, கொடிகளும் வளர்ந்துள்ளன.
அகற்ற கோரிக்கை
இந்த மரம், செடி, கொடிகளால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதுடன், விரிசல் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறைக்கும் பலமுறை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை.
எனவே பாலத்தின் இருபுறமும் வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளை உடனே அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.