கழிவுநீர் வாய்க்கால் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது


கழிவுநீர் வாய்க்கால் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது
x

புதுவை மரப்பாலம் சந்திப்பில் 100 அடி சாலையில் கழிவுநீர் வாய்க்காலுக்கான தரைப்பாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

புதுச்சேரி

புதுவை மரப்பாலம் சந்திப்பில் 100 அடி சாலையில் கழிவுநீர் வாய்க்காலுக்கான தரைப்பாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது

மரப்பாலத்தில் கழிவுநீர் கால்வாய் பாலம்

புதுவை மரப்பாலம் சந்திப்பு 100 அடி சாலையில் வேல்ராம்பட்டு ஏரியில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் பழுதடைந்துள்ளதால் சற்று பெரிய அளவிலான தரைப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளை 2 கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது அண்ணாநகர், எல்லைப்பிள்ளைசாவடி பகுதிகளில் அமைக்கப்பட்டதுபோல் 'பிரிகாஸ்ட்' முறையில், அதாவது ரெடிமேடாக பாலம் தயார் செய்து குழிதோண்டி புதைக்கப்பட உள்ளது.

மணல் மூட்டைகள்

இதற்கான முதற்கட்ட பணி இன்று இரவு முதல் தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலையில் பேரிகார்டு போட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சாலை நடுவில் 30-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக மரப்பாலம் 100 அடிசாலையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது இந்திராகாந்தி சிக்னலில் இருந்து மரப்பாலம் நோக்கி வரும் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

27-ந் தேதிவரை..

விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் இந்திரா்காந்தி சதுக்கத்தில் இருந்து புவன்கரே வீதி, மரப்பாலம் வழியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடலூரில் இருந்து புதுவைக்கு வரும் கனரக வாகனங்கள் புவன்கரே வீதியில் செல்ல தடை செய்யப்படுகிறது. மாறாக கடலூரில் இருந்து வரும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் 100 அடி சாலையின் ஒருபக்க சாலையில் வழக்கம்போல மரப்பாலத்தில் இருந்து இந்திராகாந்தி சிலை வந்து புதிய பஸ் நிலையம் வரலாம்.

திண்டிவனம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ராஜீவ்காந்தி சிக்னல், இந்திராகாந்தி சிக்னல் மார்க்கமாக கடலூர் நோக்கி வரும் லாரி, டிரக்குகள் அனைத்தும் கோரிமேடு போக்குவரத்து நகரம், மேட்டுப்பாளையம் ரோடு வழியாக அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் வருகிற 27-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story