சிலைக்கு, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை


சிலைக்கு, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
x

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுச்சேரி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், கே.எஸ்.பி.ரமேஷ், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். பின்னர் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காங்கிரஸ்

புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து காங்கிரசார், தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story