கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் பண்டிகை முடிந்த நிலையிலும் புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
புதுச்சேரி
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையிலும் புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார விடுமுறை நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் குவிந்தனர்.
பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில் கடந்த வாரத்துக்கு முன்பு புதுவை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பொங்கல் பண்டிகை காரணமாக வெளியூர் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இருப்பினும் உள்ளூர் மக்களால் கடற்கரை களைகட்டியது.
மீண்டும் குவிந்தனர்
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இந்த வாரம் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. வண்ண, வண்ண உடைகளில் ஒயிட் டவுன் பகுதிகளில் அவர்கள் வலம் வந்தனர். அங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள் முன்பு நின்று அவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
கடற்கரையில் இறங்கி அவர்கள் ஆனந்த குளியலில் போட்டனர். அதேபோல் சுண்ணம்பாறு படகு குழாமுக்கு சென்று அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, கடற்கரை, அருங்காட்சியகம் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சண்டே மார்க்கெட்டிலும் உள்ளூர்வாசிகள், வெளியூர்வாசிகள் கூட்டத்தை காண முடிந்தது.