நோணாங்குப்பம் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நோணாங்குப்பம் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறை எதிரொலியாக நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர்.

அரியாங்குப்பம்

தொடர் விடுமுறை எதிரொலியாக நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர்.

தொடர் விடுமுறை

சுற்றுலா தலமாக புதுவைக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்தநிலையில் சனி, ஞாயிறு, விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக கடற்கரை, பாரதிபூங்கா, பாண்டி மெரினா, தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா தலங்கள் களை கட்டின.

படகு சவாரி

குறிப்பாக அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் பகுதியில் இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

விதவிதமாக படகுகளில் சுண்ணாம்பாற்றில் இயற்கை ரசித்தபடி பாரடைஸ் கடற்கரைக்கு சென்று பொழுதை கழித்தனர். மேலும் இறங்கி உற்சாக குளியல் போட்டனர்.

Next Story