தமிழர் மரபு உணவு திருவிழா


தமிழர் மரபு உணவு திருவிழா
x

புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழர் மரபு உணவு திருவிழா இன்று நடந்தது.

புதுச்சேரி

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழர் மரபு உணவு திருவிழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமை தாங்கி உணவு திருவிழா கண்காட்சியை தொடங்கி வைத்தார். விழாவில் உணவு திருவிழா எதற்காக நடத்துகிறோம்? அதன் அவசியம் என்ன? என்பது குறித்து பேசினார்.கண்காட்சியில் தமிழர் மரபு சார்ந்த உணவு பொருட்கள், தமிழர் விளையாட்டு பொருட்கள் மாதிரிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்று பேசினார். முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.


Next Story