விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்


விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
x

மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

மாதூர்

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அகரமாங்குடி கிராமத்தில் 'நெற்பயிரில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம்' பற்றிய பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் முகாமை தொடங்கி வைத்தார். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) அரவிந்த் நெல் சாகுபடியில் உர பயன்பாடு, உரமிடும் முறை, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல், உயிர் உரம் பயன்படுத்தும் முறைகள் மற்றும் நேனோ யூரியாவை டிரோன் மூலம் பயன்படுத்தும் முறை ஆகிய தலைப்புகளில் விவசாயிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து, விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார். இந்த பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காரைக்கால் அகலங்கண்ணு கிராமத்தில், வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், வயல் வெளி பரிசோதனைதிடல் திட்டத்தின் கீழ் கத்தரி பயிரில் வயல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர் திவ்யா, காய்ப்புழுக்கள் மற்றும் மாவுப்பூச்சியை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.


Next Story