கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம்


கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம்
x

மாதூாில் கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது.

மாதூர்

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஐதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மத்திய வறண்ட நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள வேளாண் திட்டத்தின் (நிக்ரா) கீழ், அறிவியல் முறையில் கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமை, வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் பருவ நிலை மாற்றத்தினாலும், மழைக்காலங்களில் வெள்ளத்தினாலும் பயிர் சாகுபடியில் ஏற்படக்கூடிய நஷ்டங்களை ஈடுகட்ட கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு கூடுதல் வருமானம் ஈட்ட பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி கோழிகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை தடுப்பதற்கான தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிலைய தொழில்நுட்ப வல்லுநர் (கால்நடை) டாக்டர் கோபு, நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமாக பயிற்சி அளித்தார். தொடர்ந்து நிக்ரா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 39 விவசாய பயனாளிகளுக்கு, கலப்பின கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது.


Next Story