பொது இடத்தில் ரகளை; 2 வாலிபர்கள் கைது


பொது இடத்தில் ரகளை; 2 வாலிபர்கள் கைது
x

திரு-பட்டினத்தில் பொது இடத்தில் ரகளை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

திரு-பட்டினம் போலீசார் வழக்கமான ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். மலையான் தெருவில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு பொது இடத்தில் கூச்சலிட்டுக் கொண்டு ரகளையில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பச்சைபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயமணிகண்டன் (வயது 28), என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதுபோல் பைபாஸ் சாலை, நாகூர் சாலை சந்திப்பில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டத்தைச் சேர்ந்த காஸ்ட்ரோ (25), என்பவரை திரு-பட்டினம் போலீசார் கைது செய்தனர்.


Next Story