காசநோய் விழிப்புணர்வு முகாம்


காசநோய் விழிப்புணர்வு முகாம்
x

ஒதியம்பட்டு ஸ்ரீ வண்ணாரப்பரதேசி சித்தர் சுவாமிகள் கோவில் வளாகத்தில் அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலமாக தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வில்லியனூர்

வில்லியனூர் தொகுதி ஒதியம்பட்டு ஸ்ரீ வண்ணாரப்பரதேசி சித்தர் சுவாமிகள் கோவில் வளாகத்தில் அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலமாக தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தீவிர காச நோய் கண்டுபிடிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. புதுச்சேரி அரசு காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் விவேகா, வில்லியனூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திலகம் ஆகியோர் கலந்துகொண்டு காசநோய் அறிகுறிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

விழாவில் சமூக நலத்துறை தலைமை அதிகாரி டாக்டர் வேத பிரியா, வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி செவிலியர்கள் ரத்னா, எட்வீனா, சுதா மற்றும் கல்லூரியின் சமூக மருத்துவ துறையைச் சார்ந்த மருத்துவ அதிகாரி, பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டு அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story