வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்


வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

புதுச்சேரி காந்திவீதி வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி காந்திவீதி வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேதபுரீஸ்வரர் கோவிலில்

புதுவை காந்திவீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலின் 37-வது ஆண்டு மகோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வெள்ளிப்பல்லக்கில் சுவாமி வீதி உலாவும், அபிஷேக ஆராதனையும், மாலையில் பல்வேறு வாகனத்தில் வீதி உலாவும் நடந்து வருகிறது.

கடந்த 29-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் 63 நாயன்மார்கள் அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு 8 மணியளவில் வீதி உலா நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அமைச்சர் லட்சுமி நாராயணன், ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது.

திங்கட்கிழமை காலை திருஞானசம்பந்தர் உற்சவமும், தொடர்ந்து அபிஷேகமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. வருகிற 6-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.


Next Story