மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
x

நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் குலோத்துங்கன் தொடங்கி வைத்தார்.

காரைக்கால்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் குலோத்துங்கன் தொடங்கி வைத்தார்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் வி.வி.பாட் எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. இதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளதா? ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது.

அரசியல் கட்சியினர் முன்னிலையில்...

இந்த பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டருடன், தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தொடங்கி வைத்தார். இதையடுத்து எந்திரங்கள் செயல்பாடு சரியாக உள்ளதா? என்று நிபுணர்கள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தாசில்தார் செல்லமுத்து மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு அறைக்குள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் செல்போன். கேமரா, மின்னணு சாதனங்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story