வெங்கட்டா நகர் பூங்காவில் சுவர் ஓவியம்


வெங்கட்டா நகர் பூங்காவில் சுவர் ஓவியம்
x

புதுச்சோியில் போஸ்டா் ஒட்டுவதை தவிா்க்க வெங்கட்டா நகர் உள்ள பூங்காவில் சுவர் ஓவியகளை வரையப்பட்டது.

புதுச்சேரி

புதுவையில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களின் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவது, விளம்பரங்கள் செய்வது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனால் அந்த கட்டிடங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. இவற்றை களையும் விதமாக பல்வேறு அமைப்பினர் அழகிய சுவர் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

அதன்படி புதுவை வெங்கட்டா நகர் சிறுவர் பூங்காவின் உட்புற சுவர்களில் வண்ண ஓவியங்களை புதுவை பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற அமைப்பு, கவிதை வானில் கவிமன்றம் சார்பில் வரையப்படுகின்றன. இதனை புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முதுநிலை பொறியாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

1 More update

Next Story