குடிநீர் வினியோகம் நாளை மறுநாள் நிறுத்தம்


குடிநீர் வினியோகம் நாளை மறுநாள் நிறுத்தம்
x

புதுவை சுதேசி மில் வளாக நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் வினியோகம் நாளை மறுநாள் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி

புதுவை பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை சுதேசி மில் வளாக நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை உருளையன்பேட்டை, ராஜாநகர், அய்யனார் நகர், சாந்திநகர், இளங்கோ நகர், சாரதி நகர், ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story