மேற்கு வங்க மாநில உதய நாள் விழா

புதுவை கவர்னர் மாளிகையில் மேற்கு வங்க மாநில உதய நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இன்று மாலை மேற்கு வங்க மாநில உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசுகையில், புதுவைக்கும் மேற்கு வங்கத்திற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அரவிந்தர் மேற்கு வங்கத்தில் இருந்து புதுவைக்கு வந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார். இதேபோல் இங்குள்ள மேற்கு வங்க மக்கள் நமது மாநில வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மேலும் பணியாற்ற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் புதுவை மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற மேற்கு வங்க மாநில மக்களுக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், தேசபக்திப் பாடல்கள், மேற்கு வங்காள மாநிலத்தின் கலாசார சிறப்பு பற்றிய உரை இடம் பெற்றன. நிகழ்ச்சியில் புதுவை மாநிலத்தில் வசிக்கும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மக்கள் பலர் கலந்துகொண்டனர்.






