சமாதானம் பேசியபோது இரு தரப்பினர் மோதல்


சமாதானம் பேசியபோது இரு தரப்பினர் மோதல்
x

திருபுவனை அருகே பிரிந்த தம்பதியை சேர்த்து வைக்க சமாதானம் பேசியபோது இரு தரப்பினர்க்கிடையே மோதல் ஏற்ப்பட்டது.

திருபுவனை

திருபுவனை அருகே மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (வயது 30). இவருக்கும், மரக்காணம் அருகே உள்ள செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 6 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து கனிமொழி தனது தாயாா வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் இருவரும் சேர்ந்து வாழும்படி உறவினர்கள் அறிவுரை கூறியுள்ளனர். அதன்பேரில் மதன் தனது அண்ணன் குணசேகர், உறவினர் நாகராஜ் மற்றும் நண்பர் ஆனந்த் ஆகியோருடன் கனிமொழியின் தாயார் வீட்டுக்கு சென்று சமாதானம் பேசினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story