பரவலாக மழை
காரைக்காலில் பரவலாக மழை பெய்தது.
காரைக்கால்
வெயில் முடிந்தபோதிலும் காரைக்கால் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக 2 முறை பள்ளி திறப்பும் தள்ளி வைக்கப்பட்டது. அனல் காற்றும் வீசியதால் பகல் நேரங்களில் வெளியில் வருவதையே பொதுமக்கள் தவிர்த்தனர்.
இந்தநிலையில் தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி நேற்று இரவு முதல் காரைக்காலில் லேசாக சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் இரவு விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் இதமான சூழல்நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் இந்த மழையால் விவசாயிகள் விதைப்பு பணிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.