தவணை தொகை செலுத்தாமல்,மற்றொருவருக்கு கார் விற்பனை

புதுவையில தனியார் நிதி நிறுவனத்தில் தவணை கடனை செலுத்தாமல் மற்றொருவருக்கு காரை விற்று மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி
தனியார் நிதி நிறுவனத்தில் தவணை கடனை செலுத்தாமல் மற்றொருவருக்கு காரை விற்று மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் விற்பனை
புதுவை முத்தியால்பேட்டை ஜமீன்தார்கார்டன் பகுதியை சேர்ந்தவர் தாரக் பரசார் (வயது 36). இவர் கார் வாங்க விரும்பினார். இதுதொடர்பாக ஆரோவில்லை சேர்ந்த தனது நண்பர் பாலு என்ப வரிடம் கூறியுள்ளார். அவர் புதுவை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்த திருவரசன் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். திருவரசன் தன்னிடம் உள்ள காரை ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்க ஒப்புக்கொண் டுள்ளார்.
அந்த பணத்தை கொடுத்து தாரக் பரசார் காரை பெற்றுக்கொண்டார். ஆனால் காரின் உரிமையாளர் பெயரை மாற்றுவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்டபோது, பின்னர் போட்டு தருவதாக கூறியுள்ளார்.
தவணைத்தொகை
கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் தாரக் பரசார் செஞ்சி சாலையில் காருடன் நின்றபோது தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கார் பெயரிலான கடனுக்கு தவணைத்தொகை கட்டாததால் காரை பறிமுதல் செய்தனர். அப்போதுதான் அந்த கார் மீது நிதி நிறுவனத்தில் கடன் தொகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது.
திருவரசனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது பணத்தை விரைவில் தந்துவிடுதாக திருவரசன் கூறியுள்ளார்.
ஆனால் அவர் உறுதி யளித்தபடி பணத்தை தராத தால் தாரக் பரசார் பெரியகடை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் திருவரசன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.