மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x

புதுவையில் கோவில் திருவிழாவுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதராப்பட்டு

புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் அருகே காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). தொழிலாளி. அவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் சவுண்ட் சர்வீசில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் சேதராப்பட்டு அருகே கரசூரில் கோவில் திருவிழாவிற்காக சதீஷ்குமார் மின்விளக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story