ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x

காரைக்காலில் மது போதையில் இறால் மீன் பிடித்து கொண்டிருந்தவர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

காரைக்கால்

காரைக்கால் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது38). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பழனிசாமி மீன்பிடி துறைமுகத்தில் சுமை தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

துறைமுகத்தில் வேலை இல்லாத நேரத்தில், ஆற்றில் இறங்கி இறால் பிடிப்பது வழக்கம். நேற்று காலை காரைக்கால் மேலஓடுதுறை அருகே உள்ள அரசலாற்றில் இறால் பிடித்து, அதை விற்றதில் கிடைத்த பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, போதையுடன் மீண்டும் ஆற்றில் இறங்கி இறால் பிடித்தார். அப்போது நிலைதடுமாறி பழனிசாமி ஆற்றில் மூழ்கினார். நீண்ட நேரமான நிலையில் அவரை காணாமல் கரையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏதோ விபரீதம் நடந்து இருப்பதை உணர்ந்த அவர்கள் இதுகுறித்து காரைக்கால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி பழனிசாமி உடலை மீட்டனர். இது குறித்து, பழனிசாமியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story