தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

திருநள்ளாறு அருகே வாழ்க்கையின் ஏற்பட்ட விரக்தியால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டுச்சேரி

திருநள்ளாறை அடுத்த பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவரது வீட்டில் உறவினரான தாராசுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 60) தங்கியிருந்து மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கலைமணி கொடுத்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story