தொழிலாளியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு


தொழிலாளியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
x

புதுவையில் தொழிலாளியை தாக்கி பணம், செல்போனை பறித்த ரவுடிகள் 4 போரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவை கோவிந்தசாலையை சேர்ந்தவர் கருணாஜோதி (வய5). தொழிலாளி. இவர் நேற்று தனது பக்கத்து வீட்டை சேர்ந்த மோகன் என்பவருடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி சஞ்சய்குமார், அவரது கூட்டாளி விநாயகம் ஆகியோர் கருணாஜோதி, மோகன் ஆகியோரை வழிமறித்து பணம் கேட்டனர். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய்குமாரும், அவரது கூட்டாளியும் சேர்ந்து கீழே கிடந்த செங்கல்லால் அவர்களை சரமாரியாக தாக்கினார்கள்.

இதனால் பயந்துபோன கருணாஜோதி, தனது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,000, செல்போனையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் கருணாஜோதி அளித்த புகாரின்பேரில் ரவுடி சஞ்சய்குமார், விநாயகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story