தனியார் தொழிற்சாலை முன் ஊழியர்கள் தர்ணா


தனியார் தொழிற்சாலை முன் ஊழியர்கள் தர்ணா
x

புதுவையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கக்கோரி தனியார் தொழிற்சாலை முன் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருபுவனை

திருபுவனையில் பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக்கோரியும் தொழிற்சாலை முன் ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story