உலக சுற்றுச்சூழல் தினம்


உலக சுற்றுச்சூழல் தினம்
x

மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

திருபுவனை

மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக டாக்டர் கோபால், வாசவி கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சுபா ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பது, மறு சுழற்சி செய்வது, அனல் மின் நிலையத்தில் இருந்து சூரிய சக்திக்கு மாறுவது, பசுமை காடுகளை அதிகரிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் 'மரம் வளர்ப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

1 More update

Next Story