மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

புதுச்சோியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.

புதுச்சேரி

புதுவை சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது மோட்டார் சைக்கிளை பஸ்நிலையம் அருகில் உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு கடலூருக்கு சென்றார். பிற்பகலில் அவர் புதுவை திரும்பி மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது வாலிபர் ஒருவர் அதை ஓட்டி சென்றுகொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து கண்ணன் அருகில் இருந்தவர்கள் உதவியோடு அவரை மடக்கி பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் தொட்டிக்குடியை சேர்ந்த ஹரி (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். மேலும் அவர் புதுவையில் வேறு மோட்டார் சைக்கிள் எதையும் திருடி உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story