வண்டலூர் பூங்காவில் 20 குட்டிகளை ஈன்ற 2 அனகோண்டா பாம்புகள்


வண்டலூர் பூங்காவில் 20 குட்டிகளை ஈன்ற 2 அனகோண்டா பாம்புகள்
x
தினத்தந்தி 23 July 2024 9:10 AM IST (Updated: 23 July 2024 12:03 PM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றன.

வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா பாம்பு ஒன்று 9 குட்டிகளை ஈன்றது. இதைபோல மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளை ஈன்றுள்ளது.

2 அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றுள்ளதால் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த குட்டிகளை பூங்கா ஊழியர்கள் தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் அடைத்து பராமரித்து வருகின்றனர். அதைபோல பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்தியாவில் மட்டுமே காணப்படும் காட்டு பூனை 3 குட்டிகளை ஈன்றுள்ளது.

1 More update

Next Story