ஆன்லைன் மூலம் மது விற்பனையா? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்


ஆன்லைன் மூலம் மது விற்பனையா? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
x
தினத்தந்தி 17 July 2024 12:10 PM IST (Updated: 17 July 2024 3:47 PM IST)
t-max-icont-min-icon

எந்த புது முயற்சியிலும் இறங்கத் திட்டம் இல்லை என்று, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய, உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக வெளியான தகவலுக்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை. இதுபோன்ற எந்த புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் இறங்கத் திட்டம் இல்லை எனவும் கூறியுள்ளது.

1 More update

Next Story