தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?


தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 15 July 2024 10:08 AM IST (Updated: 17 July 2024 10:20 AM IST)
t-max-icont-min-icon

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மே மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை அதிகரித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.99.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story