சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை?


சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
x
தினத்தந்தி 14 Aug 2024 8:18 AM IST (Updated: 14 Aug 2024 7:13 PM IST)
t-max-icont-min-icon

மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை,

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.அதன்படி, ஸ்டான்லி, சோழாவரம், அம்பத்தூர், நங்கநல்லூர், ஹஸ்தினாபுரம், பெசன்ட் நகர், செம்பாக்கம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், ஆவடி ஆகிய இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.எனவே மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1 More update

Next Story