கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை பெங்களூருவுக்கு மாற்றி விடக்கூடாது - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்


கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை பெங்களூருவுக்கு மாற்றி விடக்கூடாது - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
x
தினத்தந்தி 23 May 2024 7:52 PM GMT (Updated: 24 May 2024 12:39 AM GMT)

கன்னியாகுமரி வந்தடைந்ததும் கன்னியாகுமரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு புறப்படுகிறது.

நாகர்கோவில்,

தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கன்னியாகுமரி சட்டசபை தொகுதி உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்ட மக்கள் சென்னைக்கு செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை பெரிதும் விரும்பி பயணம் செய்து வருகின்றனர். இந்த ரெயில் தினமும் மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து அதிகாலையில் கன்னியாகுமரி வந்தடைந்ததும் கன்னியாகுமரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு புறப்படுகிறது. பின்னர் மறுமார்க்கம் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்ததும் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. இவ்வாறு அவசரமாக இயக்கப்படுவதால் ரெயில் பெட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருக்கின்றன. மேலும் சில நாட்கள் இந்த ரெயில் தாமதமாகிறது. எனவே, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை பெங்களூரு போன்ற வேறு மார்க்கத்திற்கு மாற்றி விட அனுமதிக்கக் கூடாது.

மேலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பு 12 படுக்கை வதிகளுடன் கூடிய பெட்டிகள் இருந்து வந்தன. தற்போது 5 பெட்டிகள் குறைக்கப்பட்டு 7 பெட்டிகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே முன்பு இருந்தது போல் 12 பெட்டிகளாக தொடர வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது


Next Story