வங்காளதேசத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்த இளைஞர் - ஓசூரில் கைது


வங்காளதேசத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்த இளைஞர் - ஓசூரில் கைது
x
தினத்தந்தி 9 Aug 2024 4:58 PM IST (Updated: 9 Aug 2024 5:02 PM IST)
t-max-icont-min-icon

வங்காளதேசத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்த இளைஞர் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி,

வங்காளதேச நாட்டைச் சேர்ந்த சாஹினூர் மொல்லா என்ற நபர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்ஜாத் பாஷா என்பவரது வீட்டில் கடந்த 2 மாதங்களாக வாடகைக்கு தங்கியுள்ளார். இவருடன் வங்காளதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தங்கியிருந்த நிலையில், தன்னை அந்த இளைஞர் கடத்தி வந்துள்ளதாக பெங்களூருவில் உள்ள தன்னார்வ அமைப்பிடம் அந்த சிறுமி புகார் கூறியுள்ளார்.

இது குறித்து ஆவலப்பள்ளி வி.ஏ.ஓ. நேத்ரா விசாரணை நடத்தினார். இதில் அந்த இளைஞர், சிறுமியை பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் மேற்கு வங்காள மாநில எல்லை வழியாக ஓசூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இளைஞரை கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலீசார், சிறுமியை ஓசூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைத்துள்ளனர்.

1 More update

Next Story