குலுக்கல் பரிசு திட்டத்தால் அரசு பஸ்களில் 12 சதவீதம் முன்பதிவு அதிகரிப்பு

அரசு பஸ்களில் முன்பதிவை அதிகரிகும் நோக்கில் வார நாட்களில் பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆன்-லைன் புக்கிங் தளத்தில் கூடுதலான சேவைகளை இணைத்திருப்பதாலும் மற்றும் ஆன்-லைனில் புக்கிங் செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்குவதாலும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 12 சதவீதம் முன்பதிவு அதிகரித்து உள்ளது.
மேலும், ஐ.ஆர்.சி.டி.சி., டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்(ஓ.என்.டி.சி.) மற்றும் இ-சேவை மையங்களுடன் பஸ் டிக்கெட் முன்பதிவை இணைக்கும் திட்டங்களால் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






