தமிழக காவல் துறையில் 1,299 எஸ்.ஐ. காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?


தமிழக காவல் துறையில் 1,299 எஸ்.ஐ. காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?
x
தினத்தந்தி 5 April 2025 4:39 AM IST (Updated: 10 Jun 2025 10:08 AM IST)
t-max-icont-min-icon

சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.36,900 - 1,16,600 வரை வழங்கப்படும்.

சென்னை,

தமிழக காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர்(தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) காலியிடங்கள் என 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 1,299காவல் சார் ஆய்வாளர்கள் பிரிவில் ஆண்கள் 654, பெண்கள் 279, காவல் உதவி ஆய்வாளர்கள்(ஆயுதப்படை) ஆண்கள் 255, பெண்கள் 111 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.36,900 - 1,16,600 வரை வழங்கப்படும். வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர் அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ளலாம்.

1 More update

Next Story