தூத்துக்குடியில் பைக் திருடர்கள் 3 பேர் கைது: பைக் மீட்பு

கயத்தாறு அருகே உள்ள சவலப்பேரியைச் சேர்ந்த ஒருவர் தளவாய்புரத்தில் அவரது பைக் திருடு போனதாக கயத்தாறு போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடியில் பைக் திருடர்கள் 3 பேர் கைது: பைக் மீட்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் வேல்முருகன் (வயது 32). தளவாய்புரத்தில் இவரது பைக் திருடு பேய்விட்டதாக கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் செட்டிகுறிச்சி பகுதியில் ரோந்து சென்றபேது 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

அதில் அவர்கள் திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் செல்வலட்சுமிநகர் முருகன் மகன் இசக்கிமுத்து(20), தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி லட்சுமணன் மகன் காளிமுத்து(21), சவேரியார்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் கிறிஸ்டோபர்(எ) மதியழகன்(32) என்பதும், அவர்கள் வைத்திருந்த பைக் வேல்முருகனின் பைக் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் பேலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் கோவில்பட்டி ஜே.எம். 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த 3 பேர் மீதும் திருநெல்வேலியில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பேலீசார் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com