மாட்டு கொட்டகையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை குருணை மருந்தை தின்று உயிரிழப்பு


மாட்டு கொட்டகையில் விளையாடி கொண்டிருந்த  குழந்தை குருணை மருந்தை தின்று உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Jun 2025 2:05 PM IST (Updated: 16 Jun 2025 2:05 PM IST)
t-max-icont-min-icon

மாட்டு கொட்டகையில் குழந்தை விளையாடி கொண்டிருந்தது.

சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஊராட்சியில் வசிப்பவர் குமரேசன். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. நேற்று வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

இவர்களது 3 வயது குழந்தை பூவரசன், வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது மாட்டு கொட்டகைக்கு சென்று விளையாடி உள்ளது. அங்கு இருந்த குருணை மருந்தை எடுத்து தின்றதாக தெரிகிறது. இதைக்கண்ட செல்வமணி அதிர்ச்சி அடைந்து குழந்தையை கையில் தூக்கினார். வாயை கழுவிவிட்டு பின்னர் கணவருக்கு தகவல் கொடுத்து விட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story