திருவாரூரில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அழுகி வீணாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர்,
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அழுகி வீணாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மழை நின்று இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும், விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






