தவெக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது: அருண்ராஜ் பேட்டி


தவெக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது: அருண்ராஜ் பேட்டி
x

தவெக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது என்று அருண்ராஜ் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மல்லமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எஸ்.ஐ.ஆர். படிவங்களில் பெயர் விடுபட்டவர் பெயர்களை சேர்ப்பது குறித்து வீடு, வீடாக சென்று பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் நாமக்கல் வந்துள்ளேன்.

சேலத்தில் நடக்க இருந்த மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் நடைபெற முடியாமல் போய்விட்டது. கட்சியின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும்.

கூட்டணி குறித்து முடிவு செய்ய கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குழு அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குழுவை தலைவர் விரைவில் அறிவிப்பார். த.வெ.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்பார்.

எங்கள் தலைவரை முதல்-அமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. தி.மு.க., பா.ஜனதாவை தவிர எங்கள் தலைவரை(விஜய்யை) முதல்-அமைச்சராக ஏற்று யார்? கூட்டணிக்கு வந்தாலும் அரவணைத்து செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story