கிரிவல பாதையில் நிர்வாணமாக சென்ற சாமியார் - தி.மலையில் பரபரப்பு


கிரிவல பாதையில் நிர்வாணமாக சென்ற சாமியார் - தி.மலையில் பரபரப்பு
x

கிரிவல பாதையில் பக்தர் ஒருவர் நிர்வாணமாக கிரிவலம் மேற்கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருவண்ணாமலை

பஞ்சபூத தலங்களில் புகழ்பெற்ற அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும். இங்கு 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் வெளிமாவட்ட பக்தர்கள் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வருவது வழக்கம்.

குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் இருந்து பக்தர்கள் குழுவாக நடனமாடியும், சிவனின் பக்தி பாடல்களை இசைத்தும் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று ஒரு பக்தர் நிர்வாணமாக கிரிவலம் மேற்கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தகவலறிந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி புத்தாடையை அவருக்கு அணிவித்து அறிவுரைகளை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story