சென்னை மயிலாப்பூர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


சென்னை மயிலாப்பூர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
x

பள்ளம் ஏற்பட்ட சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் திடீரென 5 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், இன்று திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பள்ளம் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக என்பது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளம் ஏற்பட்ட சாலையில் தடுப்புகள் அமைத்து, ஒருவழி பாதையாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. பள்ளத்தை சரிசெய்வதற்கான பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story