மெட்ரோ பாலம் கட்டுமான பணியின்போது விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

மெட்ரோ ரெயில் கட்டுமானம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ,
சென்னை மெட்ரோ ரெயில் பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு எல் அண்ட் டி நிறுவனம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளது. மெட்ரோ ரெயில் பாலப் பணியின் போது இணைப்பு தூண்கள் விழுந்து ரமேஷ் (43) என்பவர் உயிரிழந்தார். பாலத்தை இணைக்கும் தூண்களை பொருத்த முயன்றபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ் குடும்பத்துக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.மெட்ரோ ரெயில் கட்டுமானம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






