

சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள்மீது தந்தை பெரியாருக்கு அக்கறை உண்டு. தந்தை பெரியார் வெறும் படமல்ல, பாடம். எனவே அவரைப் படியுங்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி என்ற கற்கேட்டையில் ஓட்டை ஏதாவது விழாதா? என்ற ஏக்கத்தில் இருந்து, ஏமாற்ற அரசியலினால் நாளும் புதுப்பழி, ஆதாரமில்லாத அவதூறு பிரசாரம் செய்துவருபவர்கள், இப்படி ஒருவருக்கு, அவரது குழம்பிய மனநிலையையே தற்பேதைய கூட்டணி அழைப்பு என்று பேட்டிப் பேட்டுக்கெண்டு அரசியல் தூண்டியலைத் தூக்கிக்கெண்டு அலைகின்றனர் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அ.தி.மு.க. கூட்டணியினர்.
நடிகரின் அரிதாரம், பெரியார் பட மாலை பேன்ற காட்சிகள் வெறும் காட்சிகள்தான். மீட்சிகளுக்கானவை அல்ல. சாதிக்கலாம் என்பது பகற்கனவே. சினிமா கவர்ச்சி, பல கேடி ரூபாய் பணம் மூலம் உண்மையான ஜனநாயகனாகவே முடியாது. பிறரிடம் சரண் ஆகாமல், அவரும், அவரது தேழர்களும் புரிந்துகெண்டு, திருத்திக்கெண்டு அரசியல் நடத்த வரவேண்டும். அதற்குரிய பரிபக்குவம் முதலாவது பாலபாடம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.